Thursday, January 23, 2025
HomeLatest Newsபிக் பாஸ் வீட்டில் உண்மையில் பேய் இருக்கிறதா?- வைரலாகும் வீடியோ

பிக் பாஸ் வீட்டில் உண்மையில் பேய் இருக்கிறதா?- வைரலாகும் வீடியோ

பிக் பாஸ் 6′ ஆரம்பித்து விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது.இதுவரை சாந்தி மற்றும் அசால் கோலார் ஆகிய இருவர் வெளியேற்றப்பட்ட நிலையில் ஜி.பி. முத்து தானாக வீட்டை விட்டு வெளியேறினார். இதனை அடுத்து தற்பொழுது வீட்டில் 18 போட்டியாளர்களே மீதமுள்ளனர்.

இதில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் பேய் இருக்கு என்று அமுதவாணன் தனலக்ஷ்மியை பயமுறுத்தி இருந்தார்.இந்த நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் வீடியோவில் அமுதவாணனும் மைனாவும் பிக் பாஸ் வீட்டில் பேய் இருப்பதை உணர முடிந்தது என்று விவாதிக்கின்றனர்.

மேலும் மைனா வீட்டில் அமானுஷ்ய சக்தி இருப்பதாக அமுதவாணனிடம் அவர் கூறுவதைக் காணலாம், அதைத் தடுக்க நிகழ்ச்சி குழுவினர் நட்சத்திரங்கள் மற்றும் எலுமிச்சை கொண்டு சடங்குகளை நடத்தினர். அமுதவாணன் அதிர்ச்சியில் இருப்பது தெளிவாகத் தெரிந்தது.

இதுவும் மைனாவின் குறும்புத்தனமா அல்லது ‘பிக் பாஸ் தமிழ் 6’ செட்களில் உண்மையான பேய் இருப்பதாக முந்தைய சீசன்களில் வதந்தி பரவியதா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Recent News