Thursday, April 25, 2024
HomeLatest Newsஐஸ்கிரீம் உடலுக்கு நல்லதா? ஐஸ்கிரீம் சாப்பிட்டு சுடுதண்ணீர் குடிக்கலாமா?

ஐஸ்கிரீம் உடலுக்கு நல்லதா? ஐஸ்கிரீம் சாப்பிட்டு சுடுதண்ணீர் குடிக்கலாமா?

நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு ஐஸ்கிரீம். பூங்கா, கடற்கரை, தியேட்டர், விசேஷங்கள் என எங்கு சென்றாலும் ஐஸ்கிரீமை ருசித்து விரும்பி சாப்பிடும் வழக்கம் நம் அனைவருக்கும் இருக்கத்தான் செய்கிறது.

ஆனால் இது உடலுக்கு நல்லதா? என்றெல்லாம் நாம் யாரும் சிந்தித்து பார்ப்பது இல்லை.

ஐஸ்கிரீம் சாப்பிட்டு அடுத்த நாள், ஏன் அன்றைய தினம் இரவே சளி தொந்தரவுகளால் அவதிப்படுபவர்களும் உண்டு?

ஒரு வாரத்திற்கு சளி, இருமல் வாட்டியெடுத்து விடும், அதுவும் குழந்தைகள் என்றால் நிச்சயம் சளி பிடித்துவிடும்.

அந்நேரங்களில் ஐஸ்கிரீம் அல்லது கூலாக எதையும் சாப்பிட்டால், உடனே சுடுதண்ணீர் குடித்துவிட்டால் சளி பிடிக்காது என்று கூறுவார்கள்.இது உண்மை தானா? ஐஸ்கிரீம் சாப்பிட்டு சுடுதண்ணீர் குடிப்பதால் சளி பிடிக்காது என்பதற்கு மருத்துவ ரீதியான எந்த ஆதாரமும் இல்லை.

நமது வாயில் இயல்பாகவே வைரஸ் கிருமிகள் இருக்கும், இவை உமிழ்நீரில் கலந்து செயலிழந்து போகலாம், ஒருவேளை நாம் குளிர்ச்சியாக சாப்பிடும் போது வைரஸ் கிருமிகள் தூண்டப்பட்டு சளி பிடிக்க நேரிடும்.

அதாவது நோய்கிருமிகள் தொண்டையின் டான்சில்களில் படிந்துவிடும், இதன் வீரியம் அதிகரிக்கும் போது உடல்நலக்கோளாறுகள் ஏற்படுகிறது.எனவே எப்போதும் சாப்பிட்டு முடித்தவுடனேயே வாய் கொப்பளிப்பது நல்லது, இதனால் தொண்டையில் உள்ள கிருமிகள் அழிந்து போவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சனைகள் இருந்தால் சுடுதண்ணீரில் உப்பு கலந்து வாய் கொப்பளிப்பது தீர்வை தரும்.

சுவைக்காக ஐஸ்கிரீமில் கலக்கப்படும் சர்க்கரை பல நோய்களுக்கு காரணமாகிறது, இதில் உள்ள கொழுப்பு பொருட்களின் விளைவாக நம் உடலிலும் கொழுப்புகள் அதிகரித்து விடும்.

இதனால் ரத்த நாளங்கள் சுருங்கி, சீரான ரத்த ஓட்டம் இல்லாமல் பல நோய்கள் நம்மை அண்டிக்கொள்ளும்.

குறிப்பாக ரத்த அழுத்தம், மாரடைப்பு, தசைகளின் வலிமை குறைவு, சர்க்கரை நோய் போன்ற பல நோய்களுக்கு வழிவகுத்துவிடும்.

பிற செய்திகள்

Recent News