Saturday, December 28, 2024
HomeLatest Newsகாங்கேசன்துறை சீமேந்து ஆலையை அவதானிக்க இந்திய அதிகாரிகள் வருகை

காங்கேசன்துறை சீமேந்து ஆலையை அவதானிக்க இந்திய அதிகாரிகள் வருகை

காங்கேசன்துறை சீமேந்து ஆலை அபிவிருத்தி தொடர்பில் நேரில் ஆராய இன்று இந்திய அதிகாரிகள் குழுவினர் காங்கேசன்துறைக்கு வருகை தரவுள்ளனர்.

துறைமுகத்தை இந்திய நிதி அனுசரணையில் அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஆராயவே இன்று (29) காலை 11.30 மணிக்கு அதிகாரிகள் வருகை தரவுள்ளனர்.

இதன்போது தொழில் அமைச்சின் செயலாளரான முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்கவும் வருகை தரவுள்ளார்.

வருகை தரும் குழுவினர் பலாலி விமானப்படைத் தளத்திற்கு விமானம் மூலம் வருகைதரவுள்ளனர்.

இவ்வாறு வருகைதரும் நான்கு இந்திய அதிகாரிகளும் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை அவதானிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Recent News