Thursday, January 23, 2025
HomeLatest Newsவெளிநாட்டில் ரூ.33 கோடி லொட்டரியில் பரிசாக வென்ற இந்திய சாரதி

வெளிநாட்டில் ரூ.33 கோடி லொட்டரியில் பரிசாக வென்ற இந்திய சாரதி

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மாகாணத்தில் சாரதியாக பணியாற்றும் இந்திய இளைஞர் அஜய் ஓகுலா லொட்டரியில் 33 கோடி ரூபாய் பரிசாக வென்றுள்ளார்.

எமிரேட்ஸ் ட்ரா என்ற லொட்டரியை வாங்கிய அவர் ஜாக்பாட் அடித்த மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போயுள்ளார். இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஓகுலா துபாயில் கடந்த 4 வருடங்களாக பணி புரிந்து வருகிறார்.

தற்போது ஒரு நகைக் கடையில் சாரதியாக உள்ளார். மாதம் 3200 திர்ஹம் ஊதியமாக பெற்றுவருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையிலேயே எமிரேட்ஸ் ட்ரா என்ற லொட்டரியில் இரண்டு வாங்கியுள்ளார்.

அதில் தற்போது 15 மில்லியன் திர்ஹம் பரிசாகக் கிடைத்துள்ளது. இத்தனை கோடி பணத்தை லொட்டரியில் பெற்றுள்ளேன் என்று கூறியபோது குடும்பத்தினர் யாரும் நம்பவில்லை என தெரிவித்துள்ளார் ஓகுலா.

Recent News