Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsகாஷ்மீர் பள்ளத்தாக்குகளில் தேஜாஸ் விமானங்களுடன் இந்திய ராணுவம்..!

காஷ்மீர் பள்ளத்தாக்குகளில் தேஜாஸ் விமானங்களுடன் இந்திய ராணுவம்..!

இந்திய விமானப்படை ஆனது தனது உள்நாட்டு இலகுரக போர் விமானமான தேஜாஸை ஜம்மு-காஷ்மீருக்கு அனுப்பியுள்ளது.

இது பாகிஸ்தானின் எல்லையில் உள்ள பிராந்தியத்தின் பள்ளத்தாக்குகளில் பல்வேறுபட்ட பறக்கும் அனுபவத்தைப் பெறும் நோக்கிலான செயற்பாடு என கூறப்பட்டுள்ளது .

அண்மைக்காலமாக ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளுக்கு இந்திய விமானப்படை தொடர்ந்து தனது விமானங்களை நகர்த்தி வருகிறது.இந்த நிலையில் எல்லாப்பகுதிகளில் இந்திய விமானப்படையின் திறன்களை மேம்படுத்துவதற்காக தேஜாஸ் போர் விமானத் திட்டத்தை இந்திய விமானப்படை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

ஏற்கனவே இந்திய எல்லைகளில் தேஜாஸின் இரண்டு படைப்பிரிவுகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தேஜஸ் மார்க் 2 மற்றும் மேம்பட்ட நடுத்தர போர் விமானத்தை உருவாக்கி உள்ள நிலையில் இவை வரும் நாட்களில் இந்திய விமானப்படையில் இணையும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இவையும் எதிர்காலத்தில் எல்லை பகுதிகளில் நிறுவப்படுமிடத்து எல்லை பகுதிகளில் பாதுகாப்பானது மேலும் உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent News