Thursday, January 23, 2025
HomeLatest Newsகாங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா கடனுதவி

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா கடனுதவி

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக 45 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி இந்தியாவினால் வழங்கபட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் விரைவாக முன்னெடுக்கப்படுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டவுடன், சரக்கு மற்றும் பொதுமக்கள் போக்குவரத்து நடவடிக்கைகள் விரைவாக ஆரம்பிக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் இருந்து இந்தியாவின் தமிழ்நாட்டுக்கு கப்பல் மற்றும் விமான போக்குவரத்து நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கபட்டுள்ளன.

குறித்த போக்குவரத்து சேவைகளை முன்னெடுப்பதற்கு கடந்த அமைச்சரவை கூட்டத்தின் போது அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே, அதன் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை ஆராய்வதற்காக அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்க்கொண்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Recent News