Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsஇந்திய சீன உறவுகள் துரித வளர்ச்சியில் - டில்லியில் முழங்கிய சீன பிரதிநிதி..!

இந்திய சீன உறவுகள் துரித வளர்ச்சியில் – டில்லியில் முழங்கிய சீன பிரதிநிதி..!

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வணிக உறவு வேகமாக வளர்ந்து வருவதாக சீன சர்வதேச வர்த்தக பிரதிநிதியும் வர்த்தக துணை அமைச்சருமான வாங் ஷோவென் புது தில்லியில் நடந்த B20 உச்சி மாநாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இருதரப்பு ஒத்துழைப்புக்கான திறனை வலியுறுத்திய அவர், சீன நிறுவனங்கள் இந்தியாவில் சமமாக நடத்தப்படும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

B20 உச்சிமாநாடு பொறுப்பான, துரிதப்படுத்தப்பட்ட, புதுமையான, நிலையான மற்றும் சமமான வணிகங்களில் கவனம் செலுத்துகிறது.

உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் பதட்டங்கள் இருந்தபோதிலும்,பொருளாதார விடயங்களில் இரு நாடுகளும் ஒத்துழைப்புக்கு இடமளிக்கின்றன. அண்மையில் நடைபெற்ற சர்வதேச உச்சிமாநாடுகளில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், சீனப் பிரதமர் ஜி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடந்த 2014-ம் ஆண்டு முதல் இந்தியாவின் பொருளாதாரம் உலகின் 10-வது இடத்தில் இருந்து 5-வது இடமாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News