Wednesday, May 1, 2024
HomeLatest Newsஉலக வளர்ச்சிக்கான என்ஜினாக இந்தியா - மார்தட்டிய மோடி..!

உலக வளர்ச்சிக்கான என்ஜினாக இந்தியா – மார்தட்டிய மோடி..!

தென்ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க்கில் 15-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று தொடங்கி ஆகஸ்ட் 24-ம் தேதி வரை நடக்கிறது. அந்நாட்டு அதிபர் சிரில் ரமபோசாவின் அழைப்பின் பேரில் 15-வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று தென்ஆப்பிரிக்கா சென்றடைந்தார். ஜோகனஸ்பர்க் நகரில் பிரதமர் மோடிக்கு அந்நாட்டு வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந் நிலையில், பிரிக்ஸ் அமைப்புகளின் வர்த்தக அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: உலக பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. உலக வளர்ச்சிக்கான இன்ஜினாக இந்தியா விளங்கும். இந்தியாவில் ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்த பிறகு முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. யு.பி.ஐ. தொழில்நுட்பம் இன்று தெருவோர வியாபாரிகளால் பயன்படுத்தப்படுகிறது.

சூரிய ஆற்றல், காற்றாலை ஆற்றல், மின்சார வாகனங்கள் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்ற நாங்கள் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறோம் என தெரிவித்தார்.

Recent News