இந்தியாவின் DRDO தனது UAV மேம்பாட்டு திறன்களை வலுப்படுத்த சித்ரதுர்கா ஏரோநாட்டிகல் டெஸ்ட் ரேஞ்சின் ஓடுபாதையை விரிவுபடுத்தியுள்ளது.
இந்த விரிவாக்கம் இந்திய ஆயுதப்படைகளுக்கான பெரிய உயர்வாக காணப்படுகிறது .
இந்த வசதி ஏற்கனவே தபஸ் பிஹெச் -201 திட்டத்துடன் முன்னேற்றம் கண்டுள்ளது எனவும் இப்போது பயனர் சோதனைகளுக்கு தயாராக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தியாவின் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவதற்கும் தரைப்படைகளுக்கு ஆதரவளிப்பதற்கும் ஸ்டீல்த் விங் பறக்கும் டெஸ்ட்பெட் மற்றும் ஆர்ச்சர்-என்ஜி உள்ளிட்ட மேம்பட்ட யுஏவிகளை உருவாக்கி சோதிப்பதை டிஆர்டிஓ நோக்கமாகக் கொண்டுள்ளது.