Thursday, January 23, 2025
HomeLatest Newsஇதை மட்டும் செய்தால் Youtube அப்டேட்டுகளை முன்னரே தெரிஞ்சுக்கலாம்...!

இதை மட்டும் செய்தால் Youtube அப்டேட்டுகளை முன்னரே தெரிஞ்சுக்கலாம்…!

தினம்தோறும் அப்டேட்டுகளை கொண்டுவரும் யூடியூப் ரகசியங்களை நீங்கள் முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்.  

யூடியூப் அசுர வளர்ச்சி இணைய உலகத்தையே பிரம்பிக்க வைக்கிறது. உலகின் மூலை முடுக்களில் இருப்பவர்கள் எல்லாம் யூடியூப் பார்த்து கொண்டிருக்கின்றனர். பொழுதுபோக்கை மட்டும் கொடுத்துக் கொண்டிருந்த யூடியூப் வருமான வாய்ப்பையும் பயனர்களுக்கு அள்ளி வழங்கியது, அதனுடைய மற்றொரு மாபெரும் வெற்றி. இதனால், பொழுதுபோக்கை ரசிப்பதோடு, வருமானத்தையும் கோடிக்கணக்கானவர்கள் பெற்று வருகின்றனர். 

யூடியூப் அப்டேட்

மூலை முடுக்குகளிலெல்லாம் யூடியூப் சேனல் தொடங்கி, அதன்மூலம் சிறிய வருவாயை லட்சக்கணக்கானோர் ஈட்டிக் கொண்டிருக்கின்றனர். இப்படிப்பட்ட யூடியூப்பில் நாள்தோறும் அப்டேட்டுகள் வந்து கொண்டே இருக்கிறது. வருமான வாய்ப்பாக யூடியூப்பை நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், நிச்சயம் அந்த அப்டேட்டுகள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதவும் பலரும் தெரிந்து வைத்துக் கொள்வதற்கு முன்பே நீங்கள் அறிந்து கொள்வது தான் உங்களின் புத்திசாலித்தனத்துக்கு அடையாளம். 

யூடியூப் ரகசியம்

அதாவது யூடியூப் அப்டேட்டுகளை நீங்கள் முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், யூடியூப் ப்ரீமியம் சந்தாதாரராக மாற வேண்டும். அப்படி நீங்கள் மாறிவிட்டீர்கள் என்றால், யூடியூப் கொண்டு வரும் அப்டேட்டுகளை முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்.

 யூடியூப் நிறுவனம், தாங்கள் கொண்டுவரும் அப்டேட்டுகளை ப்ரீமியம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் கொடுக்கும். அதில் கிடைக்கும் நிறைகுறைகளைக் கொண்டு, அப்டேட்டுகளை மேம்படுத்தி அதன்பின்னரே அனைவருக்குமான அணுகலைக் கொடுக்கும். இதில் பல விஷேஷ அம்சங்கள் இருக்கின்றன. யூடியூப்பில் நீங்கள் மாஸ்டராக இருக்க வேண்டும் என்றால், ப்ரீமியம் உறுப்பினராக மாறுவது சிறந்தது. சந்தாவுக்கு ஏற்ப நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.

பிற செய்திகள்

Recent News