Monday, December 23, 2024
HomeLatest Newsநான் மட்டும் பிர்கோஸினாக இருந்திருந்தால்..! வாக்னர் குழு தலைவரை நக்கலடித்த பைடன்..!

நான் மட்டும் பிர்கோஸினாக இருந்திருந்தால்..! வாக்னர் குழு தலைவரை நக்கலடித்த பைடன்..!

வாக்னர் குழு தலைவரை அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், கிண்டலடிக்கும் விதமாக கருத்தினை வெளியிட்டுள்ளார்.

அதாவது, ரஷ்ய இராணுவத்திற்கு எதிராக வாக்னர் ஆயுதக் குழு கிளர்ச்சியில் ஈடுபட்ட பிர்கோஸின் எங்கு இருக்கிறார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.

அவ்வாறான சூழலில், வாக்னர் குழு தலைவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற தகவல்களும் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், இதுகுறித்து பைடன் கேலியாக ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் அதிபர் பைடன், நான் மட்டும் பிர்கோஸினாக இருந்திருந்தால் எனக்கு அளிக்கப்படும் உணவைக் கூட கவனமாகவே உட்கொள்வேன் ஹெல்சின்கியில் ஒரு செய்தி மாநாட்டில் கேலியாக கூறியுள்ளார்.

Recent News