Saturday, May 4, 2024
HomeLatest Newsஅமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மீண்டும் பதற்றம்…!போர்கப்பல்களை அனுப்பும் அமெரிக்கா..!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மீண்டும் பதற்றம்…!போர்கப்பல்களை அனுப்பும் அமெரிக்கா..!

ஹார்முஸ் ஜலசந்திக்கு இவ்வார இறுதியில் எஃப்-16 (F-16) ரக ஜெட் விமானங்களையும் அமெரிக்கா அனுப்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாரசீக வளைகுடாவில் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கு ஈரான் முயற்சி செய்து வருவதை அமெரிக்கா தீவிரமாக எதிர்த்து வருகின்றது.

இந்நிலையில், ஈரான், எண்ணெய் கப்பல்களை கைப்பற்றுவதையோ அல்லது அதற்கு சேதம் விளைவிப்பதையோ தடுப்பதற்காக ஹார்முஸ் ஜலசந்தியை சுற்றி போர் விமானங்களை அனுப்பி அமெரிக்கா பாதுகாத்து வருகின்றது.

கடந்த வாரம் இந்த ஜலசந்தி அருகே 2 எண்ணெய் கப்பல்களை ஈரான் கைப்பற்ற முயற்சி செய்துள்ளதுடன்,
ஒரு கப்பலின் மீது துப்பாக்கி சூடும் நடத்தியது.

தற்போது, வளைகுடா பகுதியில் ஒரு வாரத்திற்கும் மேலாக ஏ-10 (A-10) ரக தாக்குதல் விமானங்கள் ரோந்து வருகின்றன.

இவற்றிற்கு வலு சேர்க்கும் விதமாக இவ்வார இறுதியில் எஃப்-16 (F-16) ரக ஜெட் விமானங்களையும் அமெரிக்கா அனுப்பவுள்ளது.

இதன் விளைவாக வரப் போகும் நாட்களில் வளைகுடா பகுதியில் அமைதி நிலவுமா? அல்லது அதற்கு மாறாக சச்சரவு வெடிக்குமா? என்பதை நிபுணர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News