வனப்பகுதியில் காணாமல் போன சிறுவன் ஒருவன் இரண்டு நாள்களாக தொடர்ந்து பனியை சாப்பிட்டு உயிர் பிழைத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவில் மிச்சிகன் பகுதிக்கு நன்டே நெய்மி என்ற 8 வயது சிறுவன் தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளான்.
அதன் போது எதிர்பாராத விதமாக நன்டே நெய்மி காணாமல் போயுள்ளான். இதையடுத்து, பொலிஸார் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பொலிஸாரின் தீவிர தேடுதலினால் சிறுவன், பார்குபைன் மலைப்பகுதி அருகே பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளான்.
மீட்கப்பட்ட சிறுவன், தான் உயிர் பிழைக்க நீர்ச்சத்துடன் இருப்பதற்காக இரண்டு நாட்களும் பனியை சாப்பிட்டதாகவும், பெரிய மரக்கட்டையின் கீழ்ப்பகுதியில் பதுங்கி இருந்ததாகவும் தெரிவித்துள்ளான்.
இதை கேட்ட பொலிஸார் திகைப்படைந்துள்ளனர். அதன் பின்னர் மீட்கப்பட்ட சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
30 மற்றும் 40 டிகிரி பனியில் காட்டில் 8 வயது சிறுவன் எப்படி உயிர் பிழைத்தான் என்று பலரும் திகைப்படைந்துள்ளனர்.