Monday, April 29, 2024
HomeLatest News2023ஆம் ஆண்டில் விடுமுறையில் ஏற்பட்டுள்ள சிறப்புக்கள்

2023ஆம் ஆண்டில் விடுமுறையில் ஏற்பட்டுள்ள சிறப்புக்கள்

பெரும்பாலான பொது மற்றும் வர்த்தக விடுமுறைகள் வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளில் வருவதால், 2023 ஆம் ஆண்டு நீண்ட வார இறுதிகளின் ஆண்டாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை துருத்து போயா மற்றும் ஏப்ரல் 7 ஆம் திகதி புனித வெள்ளி என்ற அடிப்படையில், 2023 ஜனவரி மாதம் முதல் வருடத்தில் ஒன்பது நீண்ட வார இறுதி நாட்கள் இருக்கும்.

சிங்களப் புத்தாண்டு வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வந்துள்ளதால் அடுத்த வாரம் நான்கு நாட்கள் வார இறுதியாக இருக்கும்.

மே தினம் ஒரு திங்கட்கிழமையும், வெசாக் போயா விடுமுறை மே 5 வெள்ளிக்கிழமையும் வருகிறது.

செப்டம்பர் 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளுடன் நான்கு நாட்கள் வார இறுதி நாட்களாக அமைந்துள்ளன. பின்னரான பௌர்ணமி போயா இந்த திகதிகளில் வருகின்றன.

கிறிஸ்மஸ் டிசம்பர் 25 திங்கட்கிழமையும், உந்துவப் போயா டிசம்பர் 26 செவ்வாய்கிழமையும் இருப்பதால் டிசம்பரில் மற்றொரு நான்கு நாள் வார இறுதி நாட்கள் வருகின்றன.

சுதந்திர தினம், நவம் பௌர்ணமி போயா நாள், மகா சிவராத்திரி, ரம்ழான், பொசன் போயா, வப் போயா, தீபாவளி மற்றும் பௌர்ணமி போயா போன்ற சில பொது விடுமுறைகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்றன.

Recent News