Thursday, January 23, 2025
HomeLatest Newsகல்லூரி கழிவறையில் ரகசிய கமெரா -மாணவிகளை ஆபாச படம் எடுத்த மாணவன்!

கல்லூரி கழிவறையில் ரகசிய கமெரா -மாணவிகளை ஆபாச படம் எடுத்த மாணவன்!

தனியார் கல்லூரியில் உள்ள கழிவறையில் ரகசிய கமெரா பொருத்தி மாணவிகளை ஆபாச படம் எடுத்த மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவனின் கைபேசியில் 1,200-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பெங்களூரு கிரிநகர் பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட ஒசகெரேஹள்ளி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் உள்ள கழிவறைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவிகள் சென்று இருந்தனர். 

அப்போது மாணவிகளின் கழிவறையில் ஒரு இளைஞர் நின்றார். இதனை பார்த்த மாணவிகள் கூச்சலிட்டனர். இதனால் அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் சார்பில் கிரிநகர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தது. 

அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் கல்லூரியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்தனர். இதன்போது கழிவறைக்குள் இருந்து ஓடியது அதே கல்லூரியில் படித்து வரும் 3 ஆம் வருட மாணவரான சுபம் ஆசாத் என்பது தெரியவந்தது. 

இந்நிலையில் அவரை பிடித்து பொலிஸார் விசாரித்தனர். அப்போது மாணவிகளின் கழிவறையில் அவர் கமெரா பொருத்தியதும், அந்த ரகசிய கமெரா மூலம் மாணவிகளை ஆபாசமாக வீடியோ எடுத்ததும் தெரியவந்தது.

Recent News