Friday, December 27, 2024
HomeLatest Newsஇலங்கையில் அதிகரிக்கும் பாலியல் தொழில்; திசைமாறும் இளைஞர் யுவதிகள்!

இலங்கையில் அதிகரிக்கும் பாலியல் தொழில்; திசைமாறும் இளைஞர் யுவதிகள்!

இலங்கையில் தற்போது பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களின் எண்னிக்கை அதிகரித்துள்ளமை ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

அத்துடன், கடந்த வாரம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துரைத்த இலங்கையின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன, ” பணத்தை சம்பாதிப்பதற்காக எண்ணிப்பார்க்க முடியாத குடும்பங்களை சேர்ந்த யுவதிகள் பெருமளவில் பாலியல் தொழிலை நோக்கி செல்வதாக ” கருத்து வெளியிட்டிருந்தார்.

முன்னெப்போதும் இல்லாத அளவில் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை அடுத்து, 22 மில்லியன் இலங்கையர்களும் பாரிய கஷ்டங்களையும் துன்பங்களையும் எதிர்கொண்டு வருகின்றனர்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையால் ஏற்படும் சிரமங்களால் பல குடும்பங்களை வறுமையின் விளிம்பிற்குத் தள்ளியுள்ளன. உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான அன்றாட செய்யற்பாடுகளில் பெரும் எண்ணிக்கையான மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளமை தெளிவாக தெரிகின்றது.

முன்னர் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் அதிகளவில் வரையறுக்கப்பட்டிருந்த விபச்சார விடுதிகள், தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் வியாபித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியால் பலர் தமது வேலைகளை இழந்துள்ளனர் இதனையடுத்து, பலர் வாழ்வாதாரத்திற்காக பாலியல் தொழிலாளர்களாக மாற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

தற்போதைய சூழ்நிலையில் எந்தவொரு தொழிலும் நிலையான வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நிரந்தர வருமானத்தை பெறும் ஒரே வழி பாலியல் தொழில் என எண்ணியும் யுவதிகள் திசை மாறி செல்கின்றனர்.

இதேவேளை, நாட்டில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், வாழ்க்கை செலவும் உயர்வடைந்துள்ளமையினால் பாலியல் தொழிலுக்கான கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சமூக மட்டத்தில் பரவலான கருத்து பரிமாற்றங்கள் இடம்பெற்று வருகின்றது.

இவ்வாறான நிலையில், வலுவடைந்துள்ள நெருக்கடியில் இருந்து தங்களின் குடும்பங்களை காப்பாற்றி கொள்ள இளைஞர் யுவதிகள் தாமாகவே தம்மை பாலியல் தொழிலாளர்களாக மாற்றிக்கொள்கின்றனர் என்றும் இதனால் வருங்காலத்தில் பாரிய சமூக மாற்றத்தோடு கூடிய சிக்கல்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் என சமூக ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

ஒரு புறம் போதைப் பொருள் வியாபாரம் பாரதூரமான அளவில் பெருகி வருகிறமையை நாளுக்கு நாள் வெளியாகும் செய்திகளின் மூலம் அறிய முடிகின்றது.

அதேபோல் எண்ணிப்பார்கக முடியாத குடும்பங்களை சேர்ந்த இளைஞர் யுவதிகள் பெருமளவில் பாலியல் தொழிலை நோக்கி செல்வது இந்த நாடு எந்த திசையை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றது என்ற கேள்வியை அனைவர் மத்தியிலும் எழுப்பியுள்ளது.

Recent News