Friday, November 15, 2024

இலங்கையில் பிச்சைக்காரர்களாக அரச உத்தியோகத்தர்கள்-கவலையில் ஊழியர்கள்!

சுயதொழில் மூலம் தன்னிறைவு பெறும் தொழிலாளர்களை விட அரச ஊழியர்கள் மிக மோசமாக பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அரச சேவையாளர் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டுக்கு பின்னர் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு இல்லை. ஆனால் பொருட்களின் விலைகள் அதிகரித்து பணவீக்கம் அதிகரித்துள்ளது. அரச ஊழியர்களுக்கு வேலைக்கு வருவதற்கு பணமில்லை. அதனால் பணவீக்கம் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும். போக்குவரத்து தங்குமிடத்திற்கான கொடுப்பனவுகள் இல்லை, எரிபொருள் கொடுப்பனவுகள் இல்லை.

இது தவிர சம்பளம் கொடுக்கப் பணமில்லை என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரச ஊழியர்கள் வீதிக்கு வருவதும் அவருக்குத் தெரியும். அதனால் பணமில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் சொல்கிறார்கள்.

அரசுக்கு அமைச்சர்களை நியமிக்க தெரியும். மரண வீடுகளுக்கு செல்வதற்கு இவர்களிடம் பணம் உள்ளது. வரி கட்டும் மக்கள், அரச ஊழியர் இன்று அடிப்படை தேவைகளை செய்ய முடியாமல் உள்ளனர்.

இன்றைய அரச ஊழியர்கள் உழைக்கும் மக்களை விட ஆதரவற்றவர்கள் என்று நினைக்க வேண்டாம். இந்த அழுத்தத்தை தாங்கி கைகள் கட்டப்பட்டு அந்தப் பணத்தில் அமைச்சர்களை நியமித்து நீல நிற கார்கள் கொடுக்கிறார்கள். வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள். அடக்குமுறைக்கு வராதீர்கள். எங்கள் நிலைமையை புரிந்து கொள்ளுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos