இம்முறை சிறுபோக நேர்செய்கைக்காக இராசயன உரங்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் பாரளுமன்றில் இன்று தெரிவிக்கப்பட்டது.
இம்முறை விவசாயிகளுக்கு இரசாயன உரம் வழங்கப்படுமா என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் இன்று கேள்வி எழுப்பியுள்ள நிலையில், அரசு தரப்பில் இவ்வாறு பதில் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவிடமிருந்து 65 ஆயிரம் மெற்றிக் தொன் யூரியா கிடைக்கவிருக்கிறது. இது தவிர ஏக்கர் ஒன்றுக்கு 25 கிலோ கிராம் யூரியா இலவசமாக விவசயிகளுக்கும் வழங்கப்படும். தேவையான உரங்கள் இம்முறை வழங்கப்படும். இது தவிர இழப்பீடு நிவாரணம் உள்ளிட்ட பல சலுகைகள் விவசாயிகளுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.