Tuesday, May 7, 2024
HomeLatest Newsஅரசின் கைப்பொம்மையாக செயற்படும் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய! – சஜித்

அரசின் கைப்பொம்மையாக செயற்படும் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய! – சஜித்

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பின் மூலம் பலரின் வேடங்கள் வெளியாகின என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய பிரதி சபாநாயராக தெரிவுசெய்யப்பட்ட பின்னரே அவர் இந்த கருத்தை அவர் வெளியிட்டார்.

மொட்டு கட்சியின் ஆதரவு ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவுக்கு கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டமையை அடுத்தே தாம் தமது முடிவை மாற்றிக்கொண்டதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இந்தநிலையில் அரசாங்க கட்சியின் கைப்பொம்மையாக ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய செயற்படுகிறார் என்பது இன்று வெளியானது என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

Recent News