Monday, December 23, 2024

உடல் நிலையை மேம்படுத்த இஞ்சி கஷாயம் 

உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான உணவுகளில் ஒன்று இஞ்சி. பசியின்மை, மலச்சிக்கல் மற்றும் அஜீரணக் கோளாறுகளுக்கு இஞ்சி ஒரு சிறந்த மருந்தாகும். வயிற்று வலி மற்றும் வாந்தியை போக்க இஞ்சி எவ்வாறு உதவுகிறது என்பதை இந்த வீடியோவில் பார்ப்போம்.

வயிற்றிலே பசி குறைந்தவர்கள்,உணவு செரிமானம் இல்லாதவர்கள், வயிற்றிலே அஜீரணக் கோளாறுகள் உள்ளவர்கள் கொழுப்பு சேர்ந்த உணவுகளை தவிர்த்தல் வேண்டும்.

பசி எடுக்காமல் மந்தமாக உள்ளவர்கள் காலையில் இஞ்சியை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் பசியுணர்வு அதிகரிக்கும்.

இஞ்சியிடம் தஞ்சம் அடைந்தால் அஞ்ச வேண்டாம் என்ற அளவிற்கு சித்த மருத்துவ உலகில் நோய்க்கு தீர்வளிக்கும் அனைத்து மருந்துகளிலும் இஞ்சி இடம் பெறுகிறது. இஞ்சியாக பயன்படுவதோடு மட்டுமல்லாமல் காய்ந்த பிறகு சுக்காகவும் பயன்படுகிறது.

இதனை பற்றிய மேலதிக தகவலை அறிந்து கொள்ள மேலே உள்ள link ஐ கிளிக் செய்யவும்.

Latest Videos