Saturday, April 27, 2024
HomeLatest Newsஇலங்கையில் உயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல்: ஐ.நா கவலை!

இலங்கையில் உயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல்: ஐ.நா கவலை!

இலங்கையில் உயர்பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்துவது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சுதந்திரத்திற்கான விசேட அறிக்கையாளர் Clement Voule கவலை வெளியிட்டுள்ளார்.

கிளெமென்ட் வோல் இந்த நடவடிக்கை பொதுக் கூட்டங்களைத் தடை செய்வதாகக் கருதப்படுகிறது என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டம் செய்வதற்கான மக்களின் உரிமைகளை இலங்கை அதிகாரிகள் மதிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் சுதந்திரத்திற்கான சிறப்பு அறிக்கையாளர் Clement Voule வலியுறுத்தியுள்ளார்.

இவை உட்பட எந்த கட்டுப்பாடுகளும் நியாயமானவை, அவசியமானவை மற்றும் விகிதாசாரமானவை என்பதை உறுதிப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு Clement Voule அழைப்பு விடுத்தார்.

கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் கொழும்பில் உயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

Recent News