Tuesday, December 24, 2024
HomeLatest Newsபண மழையில் நனையப்போகும் ஜிபி முத்து ! கைவசம் இத்தனை படங்களா?அடித்தது அதிஷ்டம்

பண மழையில் நனையப்போகும் ஜிபி முத்து ! கைவசம் இத்தனை படங்களா?அடித்தது அதிஷ்டம்

பிக் பாஸ் புகழ் ஜிபி முத்து நடிகர் அஜித் படத்தில் நடிக்க இருக்கும் தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

ஜிபி முத்துவிற்கு நடிகர் தல அஜித் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வீடு தேடி வந்திருப்பதிருக்கின்றதாம்.
அதற்கான முதற்கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் ஜி பி முத்துவே கூறியிருக்கிறார்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தல அஜித் ஹூரோவாக நடிக்க உள்ள ஏகே 62 படத்தில் தான் ஜிபி முத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போகின்றாராம்.

மிக விரைவில் இது குறித்த மேலதிக தகவல்களை படக்குழுவினரே வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து அடித்த அதிர்ஷ்டம்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முதல் நபராக சென்ற ஜிபி முத்து மன அழுத்தம் காரணமாக முதல் நபராகவே வெளியேறினார்.

ஜிபி முத்து டிக்டாக் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.டிக்டாக் முடக்கியதால் தற்கொலை முயற்சி வரை சென்றார்.பிறகு இவருக்கு பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.

முதல் நாளில் இருந்தே ரசிகர்களின் ஆதரவை பெற்ற நிலையில் மகனுக்கு உடல்நிலை சரியில்லை என்பதை அறிந்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

ஒரே வாரத்தில் வெளியேறியிருந்தாலும் அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்துள்ளது.

அதேபோல அவர் தற்போது 5 படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். முதலில் தல படம் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

மிக விரைவில் அடுத்தடுத்த படங்கள் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கபப்டுகிறது.அதே போல பிக் பாஸ் சம்பளம், அடுத்தடுத்த படங்களுக்கான சம்பளம் , அவரின் யூட்டிப் சம்பளம் என அவர் பண மழையில் நனைந்து வருகின்றார்.

பிற செய்திகள்

Recent News