Thursday, January 23, 2025
HomeLatest Newsஎரிபொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு-விசேட அறிவிப்பு வெளியானது!

எரிபொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு-விசேட அறிவிப்பு வெளியானது!

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் திருத்தம் மேற்கொள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவினாலும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 25 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

இதன்படி, தற்போது 415 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் ஒரு லீற்றர் டீசல் இன்று நள்ளிரவு முதல் 430 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

அத்துடன், தற்போது 340 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் இன்று நள்ளிரவு முதல் 365 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

பிற செய்திகள்

Recent News