Monday, December 23, 2024

எலும்புகள் வலிமையாக சாப்பிடவேண்டிய பழங்கள் இவைதானாம்!

நமது உடலுக்கு நல்ல வடிவமைப்பை எலும்புகள் கொடுக்கின்றன. இத்தகைய எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். ஆனால் இந்த எலும்புகள் வயது அதிகரிக்கும் போது அதன் வலிமையை இழந்து, பல்வேறு எலும்பு தொடர்பான சிக்கல்களை சந்திக்க வைக்கின்றன. சொல்லப்போனால் இன்று பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக மூட்டு பிரச்சனைகள் உள்ளன.

இந்த மூட்டு பிரச்சனைகளுக்கு வயது ஒரு காரணமாக இருந்தாலும், போதுமான ஊட்டச்சத்து எலும்புகளுக்கு கிடைக்காமல் இருப்பதும் தான். ஆகவே எலும்புகளை வலிமையாக வைத்துக் கொள்ள, அதற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். குறிப்பாக எலும்புகளின் வலிமைக்கு கால்சியம் மற்றும் வைட்டமின் டி மிகவும் இன்றியமையாத சத்துக்களாகும். இதில் கால்சியம் எலும்பு மற்றும் பற்களின் கட்டமைப்பை மேம்படுத்த உதவுகிறது. வைட்டமின் டி கால்சியத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. அதுவும் கோடையில் பழங்களை தான் அதிகம் சாப்பிட அனைவருக்கும் பிடிக்கும்.

 ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மட்டுமின்றி, கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகிய இரண்டும் உள்ளன. எனவே இப்பழம் எலும்புகளின் வலிமையை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. ஆரஞ்சு பழத்தை ஒருவர் தொடர்ந்து உட்கொண்டு வந்தால், அது ஆஸ்டியோபோரோசிஸைத் தடுக்கும்.

வாழைப்பழம் செரிமானத்திற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், இதில் மக்னீசியம் அதிகம் உள்ளது. இந்த மக்னீசியம் எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே தினமும் வாழைப்பழத்தை சாப்பிட்டால், அது எலும்புகள் பலவீனமாவதைத் தடுக்கும்.

அன்னாசி பழம் உடலுக்கு வைட்டமின் டி மற்றும் கால்சியத்தை நேரடியாக வழங்காவிட்டாலும், இதில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், உடலில் அமில அளவை நடுநிலையாக்குகிறது மற்றும் கால்சியம் இழப்பைத் தடுக்கிறது. மேலும் அன்னாசியில் வைட்டமின் ஏ நல்ல வளமான அளவில் உள்ளது.

 ஸ்ட்ராபெர்ரி ஸ்ட்ராபெர்ரி பழங்கள் ஏராளமான ஆராக்கிய நன்மைகளை வழங்குகிறது. ஏனெனில் இப்பழத்தில் கால்சியம், மாங்கனீசு, பொட்டாசியம், வைட்டமின் கே மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை எலும்பு கட்டமைப்பை உருவாக்க உதவுகிறது.

பப்பாளி இந்த வெப்பமண்டல பழத்தில் கால்சியம் அதிகமாக உள்ளது. 100 கிராம் பப்பாளியில் 20 மிகி கால்சியம் கிடைக்கிறது. ஆகவே இப்பழத்தை அடிக்கடி உங்கள் உணவில் சேர்த்து வாருங்கள். இதனால் எலும்புகள் பலவீனமாவதைத் தடுக்கலாம்.

கிவி பழத்திலும் கால்சியம் அதிகம் உள்ளது. ஒரு கிவி பழத்தில் கிட்டத்தட்ட 60 மிகி கால்சியம் உள்ளது. இது எலும்புகளை வலுவாக்கவும், பற்களின் ஆரோக்கியத்திற்கும் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் வராமலும் தடுக்கிறது. எனவே இப்பழத்தை கண்டால் தவறாமல் வாங்கி சாப்பிடுங்கள்.

ஆப்பிள் ஆப்பிளில் வைட்டமின் சி மற்றும் கால்சியம் அதிகம் இருப்பதாக கருதப்படுகிறது. அதனால் தான் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். நீங்கள் உங்கள் எலும்புகளை வலுவாக்க வேண்டுமானால், தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிடுங்கள்.

இதனைப்பற்றி மேலதிக தகவலை அறிந்துகொள்ள மேலே உள்ள Link ஐ கிளிக் செய்யவும்.

Latest Videos