Thursday, January 23, 2025
HomeLatest Newsநான்கு மடங்காக அதிகரித்த நுளம்பு பெருக்கம் - மக்களே அவதானம்..!

நான்கு மடங்காக அதிகரித்த நுளம்பு பெருக்கம் – மக்களே அவதானம்..!

தற்போதைய மழையுடனான காலநிலை காரணமாக, கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதம் நுளம்புகளின் பெருக்கம் நான்கு மடங்குகளாக அதிகரித்துள்ளதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நாட்டில் டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாக அதன் தேசிய அமைப்பாளர் டிஸ்னக திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் 42 வீதமானவர்கள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Recent News