பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு கடன் வழங்க தயாராக இருப்பதாக ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி அறிவித்துள்ளது.
அதற்கமைய, 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு நிதி நிவாரணம் வழங்க திட்டமிட்டுள்ளது.
பாரிய கடன் பிரச்சினைகளை எதிர்நோக்கும் நாடுகளுக்கு கடன் வழங்குவது தொடர்பான வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி பலதரப்பு மேம்பாட்டு வங்கியாகும். இதன் தலைமையகம் சீனாவில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.