Thursday, January 23, 2025
HomeLatest Newsதெற்காசியாவில் முதல் முறையாக ஒரே பாலின திருமணத்திற்கு அனுமதி..!நேபாளம் அதிரடி..!

தெற்காசியாவில் முதல் முறையாக ஒரே பாலின திருமணத்திற்கு அனுமதி..!நேபாளம் அதிரடி..!

நேபாளம் ஒரே பாலின திருமணத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.

அந்த வகையில், ஒரே பாலின திருமணங்களை சட்டப்பூர்வமாக பதிவு செய்வதற்கு அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதாவது, தெற்காசியாவில் LGBTQ+ மக்களிற்கான திருமண சமத்துவத்திற்கான முதல் படியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன் பொழுது, புதிய சட்ட கட்டமைப்பை உருவாக்கும் வரையிலும், ஒரே பாலின மற்றும் பாரம்பரியமற்ற தம்பதிகள் தற்காலிகமாக பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் நீதிபதி டில் பிரசாத் ஷ்ரேஸ்தா தீர்ப்பளித்துள்ளார்.

இதற்கு மாறாக, பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் ஒருபாலின திருமணத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.

இவ்வாறான சூழலில், தெற்காசியாவில் ஓரினச்சேர்க்கை திருமணங்களை அங்கீகரம் செய்த முதல் நாடாக நேபாளம் மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News