Thursday, January 23, 2025
HomeLatest Newsஅசீமை ஆம்பள மீராமிதுனாக வர்ணித்து கலாய்க்கும் ரசிகர்கள்...!

அசீமை ஆம்பள மீராமிதுனாக வர்ணித்து கலாய்க்கும் ரசிகர்கள்…!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது சூட பிடித்து சென்றுக் கொண்டிருக்கிறது. மேலும் பிக்பாஸ் அதன் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கும் வேளையில் போட்டியாளர்களும் அதற்கேற்ப தயார்நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று இடம்பெற்ற கார்ட் கேமில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கார்டுகளை கொடுக்க வேண்டும். இதில் சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை ஆகிய நிறக் கார்டுகளில் சிவப்பு நிறக்கார்ட் நோமிநேஷன் கார்ட் எனவும் பச்சை நிறக்கார்ட் சேவ் கார்ட் ஆகவும் மஞ்சள் கார்ட் top5 இல் இல்லை என குறித்துக்காட்டப்பட்டிருந்தது.

பிக்பாஸ் பாலா

இந்நிலையில், நேற்றைய சிகப்பு, மஞ்சள் மற்றும் பச்சை கார்டு விளையாட்டில் இந்த ஒரு போட்டியாளர் முந்தைய சீசன்களில் இருந்த ஒரு போட்டியாளர் மாதிரி விளையாடுகிறார் என ஷிவின் அசீமுக்கு கார்ட் வழங்கியிருந்தார்.

எந்த போட்டியாளர் போல விளையாடுகிறேன் என பிக்பாஸ் கேட்டதற்கு சீசன் 4 மற்றும் பிக்பாஸ் அல்டிமேட் டைட்டில் வின்னர் பாலா மாதிரி விளையாடுறாரு என ஷிவின் சொன்னார்.

கலாய்க்கும் ரசிகர்கள்

இதைக்கேட்ட அசீம் பாலாவா எனக் கேட்டு ஒரு வித்தியாசமான ரியாக்ஷன் கொடுத்திருப்பார். இது பாலா ரசிகர்களை கொத்தளிக்க வைத்துள்ளது.

இதனால் ரசிகர்களை அசீமை திட்டித் தீர்த்த வண்ணமே இருக்கிறார்கள். இதற்கு பாலா ஆர்மியினர் நீ பாலா எல்லாம் கிடையாது நீ ஆம்பள மீரா மிதுன் என கிழித்துக் கொட்டியிருக்கிறார்கள்.

Recent News