Friday, November 15, 2024
HomeLatest NewsWorld Newsஉக்ரைனுக்கு எப்-16 விமானங்கள் - அதிரப்போகும் போர்க்களம்..!

உக்ரைனுக்கு எப்-16 விமானங்கள் – அதிரப்போகும் போர்க்களம்..!

உக்ரைன் ரஷ்யா போர் ஒன்றரை வருடங்களை கடந்தும் நடைபெற்று வருகின்ற நிலையில் ரஷிய தயாரிப்பான மிக்-29, சுகோய் ஜெட் போன்ற பழைய விமானங்களை கொண்டு உக்ரைன் ரஷ்யாவை எதிர்த்து போராடி வருகின்றது.

உக்ரைன்-ரஷியா போரில் அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஏராளமான ஆயுதங்களை வழங்கி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்க வேண்டுமென அந்த நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தனது போர்த்திறனை அதிகரிப்பதற்காக எப்-16 என்ற அதிநவீன போர் விமானங்களை வாங்க உக்ரைன் முடிவு செய்தது. இதனால் நெதர்லாந்து மற்றும் டென்மார்க் நாடுகளிடம் உக்ரைன் அதிகாரிகள் நீண்ட காலமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

எப்-16 போர் விமானங்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை என்பதால் அமெரிக்காவின் அனுமதி அதற்கு தேவைப்பட்டது. இவ்வளவு காலமும் அந்த அனுமதியை மறுத்து வந்த அமெரிக்கா தற்போது எப்-16 விமானங்களை மற்ற நாடுகளுக்கு வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்காக உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு இந்த விமானங்களை இயக்குவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இதன்மூலம் உக்ரைன் வான்பாதுகாப்பு மேலும் மேம்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்

இந்நிலையில், உக்ரைனுக்கு எப்-16 விமானங்கள் வழங்கப்படும் என நெதர்லாந்து மற்றும் டென்மார்க் அரசுகள் அறிவித்துள்ளன.

Recent News