Tuesday, May 21, 2024
HomeLatest Newsநிலவில் மோதிய லூனா 25 - சந்திராயனின் நிலை - வெளியான தகவல் ..!

நிலவில் மோதிய லூனா 25 – சந்திராயனின் நிலை – வெளியான தகவல் ..!

ரஷ்யாவின் லூனா – 25 விண்கலம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிலவில் விழுந்து நொறுங்கியதாக ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ்அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

குறித்த விண்கலம் நிலவின் தென் துருவத்தில் மெதுவாக தரையிறங்குவதற்கு தயாராக இருந்த நிலையில், நேற்றைய த தினம் எதிர்பாராமல் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுழன்று நிலவில் விழுந்ததாக ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

விண்வெளிக்கான போட்டியில் தற்போது ரஷ்யாவின் லூனா -25 வெளியேறியுள்ள நிலையில் இந்தியாவின் சந்திராயன் வருகின்ற 23 திகதி நிலவில் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளதையடுத்து சந்திராயனின் நிலைப்பாடு குறித்து அனைவரதும் கவனமும் தற்போது திரும்பியுள்ளது.

அந்த வகையில் இஸ்ரோவின் சந்திரயான்-3 திட்டம் அதன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. படிப்படியாக தரையிறங்குவதற்கான பணிகளை மேற்கொள்ளும் சந்திரயான் விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலாவில் பாதுகாப்பாகத் இறங்குவதற்கான இடத்தைத் தேடிக் கொண்டிருக்கிறது.
இது தொடர்பான புதிய புகைப்படங்களையும் அவ்வப்போது விக்ரம் லேண்டர் பூமிக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Recent News