Tuesday, December 24, 2024
HomeLatest Newsகுரங்கிற்கு பாலூட்ட செய்முறை விளக்கம் - இளம் தாயின் நெகிழ்ச்சி சம்பவம்!

குரங்கிற்கு பாலூட்ட செய்முறை விளக்கம் – இளம் தாயின் நெகிழ்ச்சி சம்பவம்!

இளம் தாய் ஒருவர் குரங்கிற்கு தாய் பாலூட்ட கற்றுக்கொடுத்த சம்பவம் அனைவரது மனதையும் கொள்ளை கொண்டுள்ளது. .

அமெரிக்காவின் வெர்ஜினியா மகாணத்தில் உள்ள மெட்ரோ ரிச்மன்ட் மிருகக்காட்சி சாலையின் பணிபுரியும் விட்லி என்ற பெண்ணே ஒராங்குட்டான் தாய் குரங்கிற்கு தாய்ப்பாலூட்ட கற்றுக் கொடுத்துள்ளார்.

அண்மையில் குட்டி ஈன்ற ‘ஜோயி’ என்ற ஒராங்குட்டான் குரங்கிற்கு உதவும் வகையில், தன் குழந்தையை மிருகக்காட்சி சாலைக்கு அழைத்து வந்து தாய்ப்பாலூட்ட கற்றுக்கொடுக்க விட்லி ஒப்புக் கொண்டுள்ளார்.

ஒராங்குட்டான் குரங்கான ஜோயி பிறந்து 9 மாதத்திலேயே தனது தாயிடம் இருந்து பிரிந்ததமையால் குட்டிக்கு எப்படி பாலூட்டுவது என்று அது அறிந்திருக்கவில்லை.

இதனால், விட்லி செயல் விளக்கம் மூலம் கற்றுக்கொடுக்க , விரைவில் தனது குட்டிக்கு பாலூட்ட கற்றுக் கொண்டுள்ளது ஜோயி.

ஆனால் விட்லியின் உதவி மட்டுமன்றி வேறு சில வழிமுறைகள் மூலமாகவும் அந்த குரங்குக்கு பாலூட்ட கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

அதில், ஒராங்குட்டான் குரங்குகள் தனது குட்டிகளுக்கு பாலூட்டும் வீடியோவுடன் , ஒராங்குட்டான் பொம்மையை வைத்து குட்டியை எப்படி சுமக்க வேண்டும் எனவும் பல வழிகளில் ஜோயிக்கு கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

Recent News