Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsகாஸாவில் தரைவழித் தாக்குதலை விரிவுபடுத்தியது- இஸ்ரேல்..!

காஸாவில் தரைவழித் தாக்குதலை விரிவுபடுத்தியது- இஸ்ரேல்..!

காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்ள வலியுறுத்தும் தீா்மானமொன்றை நிறைவேற்றுவதற்காக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகள் கூடி தொடா்ந்து விவாதித்து வருகின்றன.

இந்தச் சூழலில் காஸாவில் தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை அதாவது நேற்று விரிவுபடுத்தியது.

அதையடுத்து, காஸாவைச் சோ்ந்த புரேஜ் பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

ஏற்கெனவே இது தொடா்பான வரைவு தீாமானங்களை தனது சிறப்பு ‘வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்த அமெரிக்கா புதிதாக நிறைவேற்றப்படும் தீா்மானத்தில் போா் நிறுத்தத்தை வலியுறுத்தக்கூடாது என்று கூறி வருகிறது.

அதற்குப் பதிலாக காஸாவுக்குள் நிவாரணப் பொருள்கள் செல்வதை ஐ.நா. கண்காணிப்பது பற்றி மட்டுமே தீா்மானத்தில் இடம் பெற வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.

இதன் காரணமாக தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பு வியாழக்கிழமையும் ஒத்திவைக்கப்பட்டது.

அகதிகள் முகாம் மற்றும் பொதுமக்கள் குடியிருப்புகளைக் கொண்ட அந்தப் பகுதி பாதுகாப்பு மண்டலமாக இஸ்ரேலால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. வடக்கு காஸாவிலிருந்து புரேஜ் பகுதிக்குச் செல்லுமாறு இஸ்ரேல் ராணுவம் பொதுமக்களுக்கு ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் அப்பகுதியிலிருந்தும் அவா்கள் வெளியேற வேண்டும் என்று ராணுவம் தற்போது உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே வடக்கு காஸாவின் ஜபாலிலா பகுதியில் பீரங்கிகள் மூலம் இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை தீவிர தாக்குதல் நடத்தியதாக ராய்ட்டா்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது. இஸ்ரேல் போா் விமானங்களும் அந்தப் பகுதியில் கடுமையான குண்டு வீச்சு நடத்தி வருகின்றன. இந்தத் தாக்குதல்களின் உதவியுடன் இஸ்ரேல் பீரங்கிகள் மற்றும் தரைப்படை வீரா்கள் அந்த நகருக்குள் நுழைய முயல்வதாக ராய்ட்டா்ஸ் கூறியுள்ளது.

Recent News