Tuesday, April 30, 2024
HomeLatest NewsWorld Newsஇரகசிய நகர்வில் சீனா- உற்று நோக்கும் அமெரிக்கா..!

இரகசிய நகர்வில் சீனா- உற்று நோக்கும் அமெரிக்கா..!

சீனா, இந்தியாவை போல் பிற நாடுகளிடமும் முரண்டு பிடித்து வருகிறது. குறிப்பாக அமெரிக்கா-சீனா இடையே பனிப்போர் நிலவி வருகிறது. சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் அமெரிக்காவும் அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டில் சீனாவும் பல விஷயங்களில் இருந்து வருகிறது.

இந்நிலையில் சீனா மீண்டும் அணுஆயுத சோதனைகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கான இடத்தை சீனா ரகசியமாக உருவாக்கி வருவதாகவும் பகீர் தகவல் வெளியாகி உள்ளது.

சீனாவின் சின்ஜியாங்கில் இருந்து தக்லமாகன் மற்றும் கும்டாக் பாலை வனத்துக்கு இடையே லோப்நூர் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் தான் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு சீனா தனது முதல் அணுகுண்டை சோதனையை நடத்தியது.

அதன்பிறகு சீனா தொடர்ந்து அணுஆயுதங்களை அதிகரித்து கொண்டது இந்நிலையில் தான் சீனா மீண்டும் லோப்நூர் பகுதியில் அணுஆயுத சோதனைக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

அத்தோடு நவீன அணுஆயுதங்களை சோதனையிடும் வகையில் அங்கு களம் தயாராகி வருகிறது. அணு ஆயுத சோதனை நடத்த வசதியாக 60 அடி ஆழத்தில் பல இடங்களில் துளைகள் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Recent News