Friday, January 24, 2025
HomeLatest Newsதரையில் உறங்க வைக்கப்படும் ட்விட்டர் நிறுவனத்தின் பணியாளர்கள்!

தரையில் உறங்க வைக்கப்படும் ட்விட்டர் நிறுவனத்தின் பணியாளர்கள்!

ட்விட்டர் நிறுவனம் கடந்த வாரம் எலன் மஸ்கினால் கொள்வனவு செய்யப்பட்டதை தொடர்ந்து அடுத்தடுத்து ஏற்பட்டுள்ள மாற்றங்களும் எலன் மஸ்கின் புதிய நடவடிக்கைகளும் மக்கள் மத்தியில் பேசு பொருளாக மாறி உள்ளது.

இந்நிலையில், நேற்றைய தினம் வெளியாகி இருந்த ட்விட்டர் நிறுவன புகைப்படம் ஒன்று பெரும் சர்ச்சையையும் பலத்த கேள்வியையும் எழுப்பியுள்ளது.

இந்த புகைப்படத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் உற்பத்தி முகாமையாளர் பதவி வகிக்கும் பெண் ஊழியரான எஸ்தர் கிரோபோர்ட, நிறுவன தரையில் படுத்து உறங்குவது போன்ற காட்சி வெளியாகி இருந்தது.

ஏற்கனவே, தனது ஊழியர்களை அதிக நேரம் வேலை வாங்குவதாக குற்றம் சாட்டப்படும் நபரான எலன் மஸ்க் மீது இந்த புகைப்படம் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது ஊழியர்களை அவர்களது வேலை நேரத்திற்கு அதிகமான நேரம் வேலை செய்யுமாறு எலன் மஸ்க் வற்புறுத்துகிறார் என பலரும் குறிப்பிட்டுள்ளனர். ட்விட்டர் நிறுவனத்தை கொள்வனவு செய்த உடனேயே அதுவரை நிர்வாக இயக்குனர் நிதி முகாமையாளர் போன்ற முக்கிய பதவி வகித்த பலரை எலன் மஸ்க் பதவி நீக்கம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Recent News