Thursday, January 16, 2025
HomeLatest Newsபோராட்டத்தின் எதிரொலி; பிரதமரின் இல்லத்திற்கு செல்லும் வீதிகளுக்கு தடை!

போராட்டத்தின் எதிரொலி; பிரதமரின் இல்லத்திற்கு செல்லும் வீதிகளுக்கு தடை!

ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் நுழைவாயில் மற்றும் அவரது இல்லத்தின் சுற்றுப்புறங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிரதமரின் இல்லத்திற்கு செல்வதற்கு தடையாக வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ராஜபக்ஷக்களின் மீட்பரான ரணிலிடம் இருந்து தாய்நாட்டை மீட்போம் என்ற தொனிப்பொருளில் இன்று காலை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News