Tuesday, March 4, 2025
HomeLatest Newsஈஸ்டர் குண்டுத் தாக்குதல்; இலங்கையர்களுக்கு நீதியை எதிர்பார்க்கிறோம்-ஐ.நா

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்; இலங்கையர்களுக்கு நீதியை எதிர்பார்க்கிறோம்-ஐ.நா

இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அனைத்து இலங்கையர்களுக்கும் நீதி, உண்மை மற்றும் சமத்துவத்தை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில்,

ஈஸ்டர் ஞாயிறு அன்று, மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் உயிர் இழந்த அனைவரையும் நினைவுகூரும் அதே வேளையில் – அனைத்து இலங்கையர்களுக்கும் நீதி, உண்மை மற்றும் சமத்துவத்தை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

Recent News