Tuesday, December 24, 2024
HomeLatest Newsஅடுத்த 3 நாட்களுக்கு எரிபொருள் வரிசையில் நிற்க வேண்டாம்! எரிசக்தி அமைச்சர்

அடுத்த 3 நாட்களுக்கு எரிபொருள் வரிசையில் நிற்க வேண்டாம்! எரிசக்தி அமைச்சர்

அடுத்த 3 நாட்களுக்கு (20, 21, 22) எரிபொருள் வரிசையில் நிற்க வேண்டாம் என பொதுமக்களிடம் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்தோடு எதிர்வரும் 23ஆம் திகதி முதல் எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பும் என்றும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஜூன் 23 அன்று பெட்ரோல் மற்றும் ஜூன் 24 அன்று டீசல் இறக்குமதிக்காக 90 மில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெட்ரோலுக்கு அதிக தேவையை ஏற்படுத்த வேண்டாம், அத்தியாவசியமற்ற பயணங்களுக்காக அவற்றை பெற்றுக்கொள்ள வேண்டாம் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

முச்சக்கர வண்டி சாரதிகள் போன்ற எரிபொருளை நம்பி வாழ்வாதாரம் கொண்டவர்கள் உட்பட அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் வைத்தியர்கள் மற்றும் ஏனைய அத்தியாவசிய ஊழியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

Recent News