ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி அமெரிக்காவிற்குள் நுழையக் கூடாது எனவும் மேலும் சர்வதேச பொது மேடைகளில் அவர் பேசக் கூடாது எனவும் அவருக்கு எதிரான சர்வதேசக் குற்ற விசாரணைகளை உடன் ஆரம்பிக்க வேண்டும் எனக் கூறி பெரும் எண்ணிக்கையிலான ஈரான் எதிர்ப்பாளர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தின் முன்பாக ஒன்று கூடி பதாகைகளை ஏந்திய வண்ணம் தமது எதிர்ப்புக்களை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் குறித்து மேலும் தெரிய வருவதாவது “ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி 1988ம் ஆண்டு 30,000 அரசியல் கைதிகளை படுகொலை செய்ததாகவும், அதேபோன்று கடந்த 2019ம் ஆண்டு நவம்பரில் நடந்த கிளர்ச்சியாளர்களின் போராட்டத்தின் போது 1,500 பேரைக் கொன்றதாகவும், இறுதியாக கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து கிட்டத்தட்ட 600 பேருக்கு மரண தண்டணை கொடுத்து நிறைவேற்றியுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபாதி ரைசி மீது குற்றம் சாட்டுவதுடன் ஜனாதிபதி ரைசியை உடன் கைது செய்து சர்வதேச குற்றிவியல் நீதிமன்றில் நிறுத்துமாறும் மனித குலத்திற்கு எதிராக மிகக் கடுமையன குற்றம் புரிந்துள்ளார் எனவும் ஆர்பாட்டக்காராகள் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.