Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsபுலம்பெயர்தவர்களுக்கு ஆபத்து - கொந்தளிக்கும் கிறீஸ்..!

புலம்பெயர்தவர்களுக்கு ஆபத்து – கொந்தளிக்கும் கிறீஸ்..!

கிரீஸ் நாட்டில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது.

தொடர்ந்து வெப்ப அலை மற்றும் பலத்த காற்று வீசுவதால் காட்டுத் தீயின் தாக்கம் தொடர்ந்து நீடிக்கிறது. இந்நிலையில், காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள வடமேற்கு ஏவ்ராஸ் பகுதியில் உள்ள டாடியா வனப்பகுதியின் அருகே 20 பேரின் உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

இந்த பகுதியானது, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசியாவில் இருந்து புலம்பெயர்ந்து வரக்கூடிய மக்கள் துருக்கியிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆற்றைக் கடந்து செல்வதற்கான முக்கிய பாதையாக இருப்பதால், உயிரிழந்தவர்கள் புலம்பெயர்ந்தவர்களாக இருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.

Recent News