செர்பியாவில் கடந்த மே மாதம் இடம்பெற்ற
இரு தொடர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 18 பேர் கொல்லப்பட்டதுடன் 20 பேர் காயமுற்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் தொடக்கநிலைப்பள்ளிக் குழந்தைகளாகக் காணப்பட்டநிலையி்ல் இச் சம்பவத்தைத் தொடர்ந்து அரசுக்கதிராகப் போராட்டம் வெடித்தது.
குறித்த சம்பவத்தை கண்டித்து சேர்பியா அதிபர் அலெக்சாண்டருக்கெதிராராகவும் ;குறித்த வன்முறை சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட.அதிகாரிகள் பதவி விலக வேண்டுமெனவும் ; குறித்த வன்முறைச் சம்பவத்தை ஔிபரப்பும் அரச ஊடகங்களின் உரிமத்தை இரத்துச் செய்ய வேண்டுமெனவும் கோரி தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை ஊடகங்கள் இவ்வாறு ஔிபரப்புவதை அரசு கட்டுப்படுத்தவில்லையென குற்றஞ்சுமத்தும் போராட்டக்காரர்கள் 1190 களில் பால்கனில் நடைபெற்ற போரில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டதிலிருந்து இன்று வரைதொடரும் வன்முறை கலாச்சாரத்திற்கு அரசின் கட்டுப்பாட்டிலுள்ள ஊடகங்களே காரணமென குற்றஞ்சுமத்தியுள்ளனர்.
அண்மையில் பெல்கிரேட் மற்றும் பல்வேறு நகரில் இடம்பெற்ற அரச தலைவருக்கு எதிரான போராட்டத்தில் பொருமெண்ணிக்கையானோர் கலந்துகொண்டனர். இதேவேளை எதிர்காலத்தில் போராட்டங்களை அரசிற்கெதிராக விஸ்திரப்படுத்த போராட்டக்காரர்கள் திட்டமிட்டுள்ளபடியால் இப் போராட்டங்கள் எதிர்காலங்களில் அரசாங்கத்திற்கு பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்துமென நம்பப்படுகின்றது.