Sunday, April 28, 2024
HomeLatest Newsஇங்கிலாந்து மன்னர் சார்லஸின் பிறந்தநாள் விருதுக்கு 40 க்கு மேற்பட்ட இந்திய வம்சாவளியினருக்கு விருது.....!

இங்கிலாந்து மன்னர் சார்லஸின் பிறந்தநாள் விருதுக்கு 40 க்கு மேற்பட்ட இந்திய வம்சாவளியினருக்கு விருது…..!

இங்கிலாந்து மன்னன் 3 ம் சார்லஸ் தனது 75 வது பிறந்தநாளை எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ம் திகதி கொண்டாடவுள்ள நிலையில்
பிறந்தநாளுக்கான முன்னேற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.

குறிப்பாக இவர் மன்னராக முடிசூடப்பட்ட பின் கொண்டாடப்படும் முதலாதவது பிறந்தநாள் ஆகையால் பிறந்தநாளை முன்னிட்டு வழமையாக்மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் சிறந்த பங்காற்றுபவர்களுக்கு வழங்கப்படும் விருதானது இம்முறையும் வழங்கப்படவுள்ளது.

இம்முறை இவ் விருதுகளுக்காக 1171 பேரை அடக்கிய பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது. இவர்களில் 52 சதவீதமானோர் தாம் பணி புரியும் துறைகளில் சிறந்த பங்காற்றியோர்களாகக் காணப்படுகின்றனர். இவற்றை விட இப் பட்டியலி்லுள்ள 11 சதவீதமானோர் சிறுபான்மையினத்தவராகக் காணப்படுகின்றனர்.

இதிலும் சிறப்பாக 40 க்கு அதிகமான இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த வைத்தியர்கள் , தொழிலதிபர்களுடன் சமூக செயற்பாட்டாளர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இப் பட்டியலிலுள்ள டாக்டர் பர்விந்தர் கவுல் அலே , பேராசிரியர் புரோகார் தாஸ்குப்தா ,தொழிலதிபர் அனுஜ் சண்டே , ஹீனா சேலாங்கி , பல்வீர் மோகன் பல்லா , ரேகேஸ் சவுகான் , கைலாஷ் மல்ஹோத்ரா , பல்பீர் தில்லான் மற்றும குல்தீப் சிங் தில்லான் உள்ளிட்டோர் விருதுகளுக்காகப் பரிந்துரைக்கபட்ட. பட்டியலிலுள்ள இந்திய வம்சாவளியினராகக் காணப்படுகின்றனர்.

Recent News