தற்போது சந்திரயான் 3 திட்டத்தின் கீழ் இந்தியா, நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
விண்வெளி துறையில் இந்தியா படைத்திருக்கும் வரலாற்று சாதனைக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் உலக நாடுகளும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், சந்திராயனுக்கு போட்டியாக ரஷ்யாவின் லூனா விண்கலம் ஏவப்பட்ட நிலையில் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதற்கு ரஷிய அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்தார் .
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இந்தியா அபரிமிதமான முன்னேற்றம் அடைந்துள்ளதற்கு இந்த வரலாற்று நிகழ்வு ஒரு சான்றாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.