சீன உலகில் ‘மாவோ சேதுங்’ அவர்களிற்கு பிறகு மிகவும் சக்தி வாய்ந்த தலைவராக கருதப்படுகின்ற தற்போதைய அதிபர் ‘ஜி ஜின்பிங்’ சுமார் இரண்டு வருடங்களிற்குப் பின்னர் தனது முதலாவது வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டிருப்பதாக சீன ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
மத்திய ஆசியாவிற்கான தனது முதலாவது பயணத்தின் முதல் பகுதியாக கஜகஸ்தானுக்கு பயணமாகியுள்ளார். பின்னர் உஸ்பெகிஸ்தானில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமா நாட்டில் பங்கு பெற்றவுள்ளதாகவும் அங்கு வைத்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திக்கவுள்ளதாகவும் இதன்போது பல முக்கிய விடயங்கள் பேசப்படவுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக ரஷ்யா மற்றும் உக்ரைன் விடயத்தில் சீனாவின் நிலைப்பாடு குறித்து தெளிவாக விளக்கப்படவுள்ளதாகவும் மறுபக்கத்தில் சீனாவின் தாய்வான் மீதான படையெடுப்பு குறித்த விளக்கம் ரஷ்யாவிற்கு வழங்கப்படவுள்ளதாகவும் மேலும் இரு நாடுகளுக்குமிடையில் எரிசக்தி மற்றும் எரிவாயு பரிமாற்றங்கள் தொடர்பிலும் பல முக்கிய கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.