Saturday, April 20, 2024
HomeLatest Newsமனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வு இன்று; இலங்கை குறித்த அறிக்கை சமர்ப்பிப்பு!

மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வு இன்று; இலங்கை குறித்த அறிக்கை சமர்ப்பிப்பு!

சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது வழக்கமான அமர்வு இன்று (திங்கட்கிழமை) சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது.

இன்று தொடங்கும் அமர்வு, ஒக்டோபர் 7ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பான விரிவான அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மனித உரிமைகள் ஆணையாளர் இது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட 46/1 தீர்மானம் தொடர்பிலான முன்னேற்றம் உள்ளிட்ட இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை கண்காணித்தல், அறிக்கை செய்தல், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பிலான விடயங்கள் அந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த அமர்வில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீதி அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ தலைமையிலான குழு ஜெனீவாவிற்கு சென்றுள்ளது.

மேலும் இன்றைய அமர்வில் வெளிவிவகார அலி சப்ரி உரையாற்றவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News