சீனாவின் இந்து சமுத்திர பிரவேசம் இந்திய மற்றும் அமெரிக்கவிற்கு பெரும் நெருக்கடியாக மாறியுள்ளது என அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த பயணத்தின் மூலம் சீனா தனது பட்டு பாதை வியூகத்தில் அரைவாசியை நிறைவேற்றி விட்டது. அதாவது இந்து சமுத்திரத்தை சாராத ஒரு நாடு இந்து சமுத்திரத்திற்குள் பிரவேசித்துள்ளது.
சீனாவிற்கான தேவை மற்றும் உற்பத்தி பண்டங்கள் அதிகரித்து விட்டன. அதனை விற்பதற்கான சந்தை வாய்ப்பை பெறுவதற்கு இந்த இந்து சமுத்திரம் தேவைபடுகின்றது.
இந்து சமுத்திரத்திற்குள் சீனாவின் வருகை இந்தியாவிற்கு பெரும் ஆபத்தாக அமையும். இதனால் சீனாவின் வருகையால் தனக்கு ஏற்பட கூடிய இலாப நட்ட கணக்கு மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தலை பற்றி தான் இந்திய ஆராயும்.”என கூறியுள்ளார்.