இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சனை நிலவி வருகின்ற நிலையில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தில் உள்ள அகாசி சின் என்ற பகுதியை தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா சொந்தம் கொண்டாடி வருவதோடு அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத் என்றும் கூறி வருகிறது.
இதையடுத்து இது தொடர்பான புதிய வரைபடத்தை சீனா கடந்த 2 தினங்களுங்கு முன்பு வெளியிட்டது. குறித்த வரைபடத்தில் தைவான் மற்றும் தென் சீனா கடலின் 80 சதவீதமான பகுதியும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் இருந்து வருவதாக சீனா தெரிவித்துள்ளது.
சீனாவின் இந்த நடவடிக்கைக்கு வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, தைவான் ஆகிய நாடுகள் தங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து உள்ளதோடு அருணாச்சல பிரதேச விவகாரத்தில் இவை இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.