Sunday, May 5, 2024
HomeLatest NewsWorld Newsநான் உயிருடன் இருக்கிறேன் - வீடியோ வெளியிட்ட ப்ரிகோஜின் - கதிகலங்கும் ரஷ்யா..!

நான் உயிருடன் இருக்கிறேன் – வீடியோ வெளியிட்ட ப்ரிகோஜின் – கதிகலங்கும் ரஷ்யா..!

ரஷ்யாவில் வாக்னர் குழு என்கிற தனியார் ராணுவ அமைப்பானது செயற்பட்டு வருவதோடு ரஷ்யா உக்ரைன் போரில் ரஷ்யா ராணுவத்துடன் இணைந்து இவர்கள் முக்கிய பங்காற்றியதோடு உக்ரைனினின் பகுதிகளையும் கைப்பற்றினர்.

இந்த நிலையில் வாக்னர் குழுவின் தலைவரான யெவ்ஜெனி பிரிகோஜின் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டார். இதன் பின்னர் வாக்னர் குழுவினர் புரட்சியை கைவிட்ட நிலையில் வாக்னர் குழுவிற்கும் அந்த குழுவின் தலைவரான யெவ்ஜெனி பிரிகோஜினுக்கும் பொது மன்னிப்பு வழங்குவதாக ரஷ்யா அறிவித்தது.

இந்த நிலையில் கடந்த 24 ஆம் திகதி தனியார் விமானத்தில் பயணித்த போது விமானம் விபத்துக்குள்ளானதில் யெவ்ஜெனி பிரிகோஜின் உள்பட 10 பேர் உயிரிழந்ததாக ரஷியா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த நிலையில் உயிரிழந்ததாக கூறப்படும் யெவ்ஜெனி பிரிகோஜினின் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.


அந்த வீடியோவில் , ” நான் உயிரோடு இருக்கிறேனா? இறந்துவிட்டேனா? என ஆலோசனை நடத்துபவர்களிடம் நான் எப்படி இருக்கிறேன் என கேட்கிறேன். தற்போது 2023ம் ஆண்டு ஆகஸ்ட் இரண்டாவது வாரம், நான் ஆப்பிரிக்காவில் உள்ளேன். தற்போது வரை என்னையும், என் தனிப்பட்ட வாழ்க்கையையும், நான் சம்பாதித்ததையும், இன்னும் பலவற்றையும் அழிக்க நினைப்பவர்களுக்கு நான் கூறுவது என்னவென்றால் அனைத்தும் சரியாக உள்ளது” என்று கூறியுள்ளார்.

இருப்பினும் இந்த வீடியோவால் வாக்னர் குழு தலைவர் பிரிகோஜின் உயிரோடு உள்ளாரா? அல்லது அவர் உயிரிழப்பதற்கு முன் எடுக்கப்பட்ட வீடியோவா? என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.

Recent News