Monday, April 29, 2024
HomeLatest Newsஇலங்கைக்கு பச்சைகொடி காட்டிய சீனா - IMF வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு

இலங்கைக்கு பச்சைகொடி காட்டிய சீனா – IMF வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு

இலங்கையின் கடன் நெருக்கடி குறித்து கலந்துரையாட சீனா இணக்கம் தெரிவித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார்.

உலகின் பல்வேறு நாடுகள் எதிர்நோக்கும் கடன் நெருக்கடி குறித்து விவாதிக்க வட்டமேசை விவாதத்தில் கலந்துகொள்ள சீனா ஒப்புக்கொண்டுள்ளது.

தனியார் துறையின் கடன் வழங்குபவர்களும் விவாதத்தில் கலந்து கொள்ள உள்ளனர். இலங்கை உள்ளிட்ட நாடுகள் எதிர்நோக்கும் கடன் நெருக்கடி தொடர்பில் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு முதற்கட்டமாக 2.9 பில்லியன் டொலர்களை கடனாக வழங்க ஊழியர் மட்ட கலந்துரையாடலில் சர்வதேச நாணய நிதியம் இணக்கம் வெளியிட்டுள்ளது.

எனினும் சீனா உள்ளிட்ட கடன் வழங்கிய நாடுகள் மறுசீரமைப்பு பத்திரம் வழங்கினால் மட்டுமே இந்த கடன் தொகையை பெற்றுக்கொள்ள முடியும் என சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News