Tuesday, December 24, 2024
HomeLatest Newsஇந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய பிரபலங்கள்! வெளியானது ப்ரோமோ

இந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய பிரபலங்கள்! வெளியானது ப்ரோமோ

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் நாமினேஷனுக்கு போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9 ஆம் திகதி ஆரம்பித்து மிகவும் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. இதில் ஆரம்பிக்கும் போது சுமார் 21 போட்டியாளர்கள் பங்கேற்றார்கள்.

மேலும் பிக் பாஸ் வீட்டில் வாரம் ஒரு புதிய டாஸ்க்கள் கொடுக்கப்பட்டும் இதில் போட்டியாளர்கள் பங்கேற்கும் விதத்தை அடிப்படையாகக் கொண்டு வாரத்திற்கு ஒரு போட்டியாளர்கள் வீதம் வெளியேற்றப்படுவார்கள்.

இதன்படி, பிக் பாஸ் சீசன் 6 ஆரம்பித்து தற்போது 60 நாட்களை கடந்துள்ளது. இதுவரை 10 போட்டியாளர்கள் குறைவாக வாக்குகளை பெற்று வெளியேறி இருக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து இந்த வாரம் வைல்ட் கார்ட் என்ட்ரியாக புதிய போட்டியாளர் வருகை இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் நேற்றைய தினம் டபுள் எவிக்ஷனில் ஆயிஷா மற்றும் ராம் வெளியேறியுள்ளார்கள். இதனை தொடர்ந்து இந்த வாரத்திற்கான நாமினேஷன் இன்று இடம்பெற்றுள்ளது.

மேலும் இதில் மணி, அசீம், ரக்ஷிதா என பல பிரபலங்கள் சிக்கியுள்ளார்கள். மேலும் வாரம் வாரம் அசீம் நாமினேஷனுக்கு செல்வதால் இந்த வாரம் அசீம் வெளியேறலாம் என போட்டியாளர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தவகையில் இன்றை நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.

Recent News