Friday, November 15, 2024
HomeLatest Newsகனேடியர்களிற்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம்..!ஆய்வாளர்கள் எச்சரிக்கை..!

கனேடியர்களிற்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம்..!ஆய்வாளர்கள் எச்சரிக்கை..!

வளியில் இரசாயன பதார்த்தங்கள் கலந்து இருப்பதால் மக்களிற்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடாவின் ஒன்றாரியோவின் ஹமில்டன் நகரில் இந்த நிலைமை காணப்படுவதாக அந்த நாட்டின், காற்று கண்காணிக்கும் ஆய்வாளர்களே எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதாவது, இந்த வளியை சுவாசிக்கும் ஒவ்வொருவரும் நாளொன்றுக்கு ஒரு சிகரெட்டை புகைப்பதற்கு நிகரான ஆபத்தினை எதிர் நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தினை, டொரன்டோ பல்கலைக்கழக பேராசிரியர் மெத்தியூ அடம்ஸே தெரிவித்துள்ளார்.

அத்துடன், பொருட்கள் முழுமையாக எரியாத போது வெளியாகும் இரசாயன பதார்த்தமான பென்ஸ்வ் (எ)ப்யறேனே என்ற இரசாயன பதார்த்தம் ஹமில்டன் நகர வளியில் கலந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், காற்றின் தரமானது புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய வகையிலானது என ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recent News